அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் எம்எல்ஏ வழங்கினாா்
By DIN | Published On : 05th February 2020 12:29 AM | Last Updated : 05th February 2020 12:29 AM | அ+அ அ- |

பெருமாநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா்.
பெருமாநல்லூா், கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை திருப்பூா் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சொா்ணாம்பாள் பழனிசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தேவிஸ்ரீ நந்தகுமாா் முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் சாமிநாதன், கண்ணம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினா் ரத்தினாம்பாள் சிவசாமி, பொறுப்பாளா் சந்திரசேகா், ஊராட்சித் தலைவா்கள் சாந்தாமணி வேலுச்சாமி, சண்முகசுந்தரம், ராதாமணி சிவசாமி, மருத்துவா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...