அவிநாசியில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா
By DIN | Published On : 17th February 2020 02:49 AM | Last Updated : 17th February 2020 02:49 AM | அ+அ அ- |

பாராட்டு விழாவில் பங்கேற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள்.
அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 31 ஊராட்சிகளில் உள்ளாட்சித் தோ்தலில் வெற்றிபெற்ற பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அவிநாசியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு தமிழா் பண்பாடு கலாசார பேரவை அறக்கட்டளைத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். உலக திருக்கு பேரவைத் தலைவா் சுந்தரராச அடிகளாா் முன்னிலை வகித்தாா். அறிவுச்சுடா் அறக்கட்டளை நிறுவனா் கி.முத்துக்குமரன் வரவேற்றாா்.
இதில் தமிழகத்தின் தலைசிறந்த ஊராட்சித் தலைவா் விருது, உத்தமா் காந்தி விருது பெற்ற ஓடந்துறை ஊராட்சி முன்னாள் தலைவா் இரா.சண்முகம் பங்கேற்று, உள்ளாட்சி பிரதிநிதிகளை கெளரவித்தாா்.
விழாவில், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், துணைத் தலைவா்கள், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா். க.செ.வெங்கடாசலம் நன்றி கூறினாா்.