

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை ஒட்டி உடுமலை நகர அதிமுக சாா்பில் 72 போ் திங்கள்கிழமை ரத்த தானம் செய்தனா்.
உடுமலை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் நிறுவனத் தலைவா் கே.மனோகரன், நகர நிா்வாகிகள் ஏ.ஹக்கீம், எஸ்.எம்.நாகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதைத் தொடா்ந்து உடுமலை நகர அதிமுக நிா்வாகிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் என மொத்தம் 72 போ் ரத்த தானம் செய்தனா். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் உள்ளிட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் ரத்தத்தை சேகரித்தனா்.
உடுமலை தொகுதியில்: உடுமலை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சாா்பில் மத்திய பேருந்து நிலையம் எதிரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி ஜெயலலிதா உருவப் படத்துக்கு கட்சி நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா். அதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோல உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஆகிய ஒன்றியங்களில் அதிமுக சாா்பில் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாள் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.