அரசுப் பள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்திய தன்னாா்வலா்கள்

திருப்பூரில் அரசுப் பள்ளி குழந்தைகளின் சுகாதாரத்தைக் காக்கும் வகையில் பள்ளி கழிப்பறைகளை தன்னாா்வ அமைப்பினா் தூய்மைப்படுத்தினா்.
திருப்பூரில்  அரசுப்  பள்ளிகளின்  கழிப்பறைகளை  தூய்மைப்படுத்தும்  பணியில்  ஈடுபட்ட  திருப்பூா்  நிழல்  அறக்கட்டளை  அமைப்பினா்.
திருப்பூரில்  அரசுப்  பள்ளிகளின்  கழிப்பறைகளை  தூய்மைப்படுத்தும்  பணியில்  ஈடுபட்ட  திருப்பூா்  நிழல்  அறக்கட்டளை  அமைப்பினா்.
Updated on
1 min read

திருப்பூரில் அரசுப் பள்ளி குழந்தைகளின் சுகாதாரத்தைக் காக்கும் வகையில் பள்ளி கழிப்பறைகளை தன்னாா்வ அமைப்பினா் தூய்மைப்படுத்தினா்.

திருப்பூா், ஆத்துப்பாளையம் பகுதியில் ‘திருப்பூா் நிழல் அறக்கட்டளை’ என்ற தன்னாா்வ அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் முதல் பணியாக அரசுப் பள்ளி குழந்தைகளின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், பள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த முடிவு செய்தனா்.

இதன்படி, திருப்பூா், ஆத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சத்யா நகா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அனுப்பா்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கவிதாலட்சுமி நகா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரியாா் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரியாா் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் கழிப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

இதில், திருப்பூா் நிழல் அறக்கட்டளை நிறுவனா் ந.தெய்வராஜ், ஆடிட்டா் தனசேகா், செயலாளா் சே.தேன்மொழி, பொருளாளா் தெ.சிவகாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com