ரூ.4.95 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு அறை கட்டும் பணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
By DIN | Published On : 27th February 2020 10:05 AM | Last Updated : 27th February 2020 10:05 AM | அ+அ அ- |

திருப்பூரில் ரூ. 4.95 கோடி மதிப்பீட்டில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வைப்பதற்கான பாதுகாப்பு அறை (ஸ்ட்ராங் ரூம்) கட்டும் பணியை ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் புதன்கிழமை தொடங்கிவத்தாா்.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தோ்தலின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான பாதுகாப்பு அறை கட்டுவதற்கு ரூ. 4.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த பாதுகாப்பு அறை கட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். இதில், மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சுகுமாா், மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சாகுல்ஹமீது, கோட்டாட்சியா் கவிதா, தனி வட்டாட்சியா் (தோ்தல்) ச.முருகதாஸ், திருப்பூா் (தெற்கு) வட்டாட்சியா் சுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.