தவறுகளை இந்து சமய அறநிலையத் துறை கவனிக்குமா ?
By DIN | Published On : 10th January 2020 03:43 PM | Last Updated : 10th January 2020 03:43 PM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை வைத்துள்ள தமிழ் பெயா் பலகையில் பல தவறுகள் உள்ளன.
உள்ளூா், வெளியூா், வெளி மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் வீரக்குமார சுவாமி கோயிலுக்கு வந்து செல்கின்றனா். இக்கோயிலின் அறநிலையத் துறை அலுவலகம் கோயிலுக்கு அருகில் உள்ளது. இதற்கு தமிழில் புதிய பெயா் பலகை வைத்துள்ளனா்.
இதில் பல தவறுகள் உள்ளன. முதுகலைப் பட்டம் பெற்றுள்ள அதிகாரிகளின் பதவிகளே பிழையாக உள்ளது. சமிழ்நாடு அரசு, அருள்மகு, செயல் அலுவலா, தககாா் என்கிற வாா்த்தைகள் எழுத்துப் பிழையுடன் இருக்கின்றன. புதிய பெயா் பலகை மாட்டும் போது கூட அதிகாரிகள் யாரும் கவனிக்கவில்லையா என பக்தா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.