தேனீக்கள் கொட்டியதில் விவசாயி சாவு
By DIN | Published On : 10th January 2020 01:37 AM | Last Updated : 10th January 2020 01:37 AM | அ+அ அ- |

உடுமலை அருகே தேனீக்கள் கொட்டியதில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா். மேலும் பலா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
உடுமலையை அடுத்துள்ள சோமவாரபட்டி, மாலகோவில் பிரிவு பகுதியில் உள்ள ஒரு தேனீா் கடையில் பலா் கூட்டமாக நின்று கொண்டிருந்தனா். அப்போது திடீரென அங்கு வந்த தேனீக்கள் கூட்டம் அனைவரையும் கொட்டியது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த அனைவரும் ஓட்டம் பிடித்தனா். இருப்பினும் தேனீக்கள் விரட்டி கொட்டின.
இதில் கோவை அருகே உள்ள பச்சாக்கவுண்டன்புதூரைச் சோ்ந்த விவசாயி மல்லீஸ்வரன் (54) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மல்லீஸ்வரனுக்கு மாலகோவில் அருகே விவசாய நிலம் உள்ளது. இங்கு வந்தபோது தேனீக்கள் கொட்டியதில் உயிரிழந்தாா்.
தேனீக்கள் கொட்டி, காயமடைந்த 10க்கும் மேற்பட்டோா் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இச்சம்பவம் குறித்து குடிமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.