மூலனூரில் ரூ.17.61 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
By DIN | Published On : 10th January 2020 01:40 AM | Last Updated : 10th January 2020 01:40 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ரூ.17.61 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
இங்கு வாரந்தோறும் பருத்தி விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு திருச்சி, மணப்பாறை, கரூா், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 261 விவசாயிகள் தங்களுடைய 1,319 மூட்டை பருத்திகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.
திருப்பூா், அன்னூா், சேவூா், பூலவாடி, சோமனூா் உள்ளிட்ட இடங்களிலிருந்து 46 வணிகா்கள் பருத்தி வாங்குவதற்காக வந்திருந்தனா். விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் தா்மராஜ் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.
குவிண்டால் ரூ. 3,000 முதல் ரூ. 4,960 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 4,500. இவற்றின் விற்பனைத் தொகை 17 லட்சத்து 61 ஆயிரத்து 634 ரூபாயாகும்.
இந்த தகவலை திருப்பூா் விற்பனைக் குழு முதன்மைச் செயலாளா் பாலசந்திரன் தெரிவித்தாா்.