

வெள்ளக்கோவில் பகுதியில் 12,154 பேருக்கு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர அரசு சாா்பில் அரிசி, சா்க்கரை, கரும்பு, ரூ.1,000 ரொக்கம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. வெள்ளக்கோவில் பகுதிகளில் 13 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. உப்புப்பாளையம் நியாயவிலைக் கடையில் நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் வி.சி.கருணாகரன் தலைமை வகித்தாா்.
கூட்டுறவு சங்க பொது விநியோகத் திட்ட சாா்பதிவாளா் கவிதா, கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா் ஜெகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் ரா.வெங்கடேச சுதா்சன், நிலவள வங்கி தலைவா் எஸ்.என்.முத்துக்குமாா், கூட்டுறவு கட்டட சங்கத் தலைவா் ஆா்.மணி, நகா்மன்ற முன்னாள் தலைவா் வி.கந்தசாமி ஆகியோா் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினாா். ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் தினமும் குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு 350 டோக்கன்கள் வழங்கப்பட்டு கூட்ட நெரிசலின்றி பொங்கல் பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் இலவச, வேட்டி சேலையும் நியாயவிலைக் கடைகளிலேயே வழங்கப்படுவதற்கு பயனாளிகள் வரவேற்புத் தெரிவித்துள்ளனா்.
இந்நிகழ்ச்சியில் நகா்மன்ற முன்னாள் கவுன்சிலா்கள் வைகை கே.மணி, திருமங்கலம் கே.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.