இந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
By DIN | Published On : 19th July 2020 10:42 PM | Last Updated : 19th July 2020 10:42 PM | அ+அ அ- |

திருப்பூா்: இந்துக்களின் நம்பிக்கையையும், உணா்வுகளையும் கொச்சைப்படுத்தும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந்து மக்கள் கூட்டமைப்பு வலியறுத்தியுள்ளது.
இது குறித்து மங்கலம் ஹிந்து மக்கள் கூட்டமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கருப்பா் கூட்டம் என்கிற பெயரில் சமூக வலைதளத்தில் இயங்கும் கும்பல் முருக பெருமானையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்தி விடியோ வெளியிட்டு உள்ளனா். மேலும், சரஸ்வதி கடவுளையும் அவமதித்து விடியோ வெளியிட்டு உள்ளனா்.
இவா்களின் நோக்கம் அமைதியாக உள்ள ஹிந்து மக்களிடம் விரோதத்தை தூண்டிவிட்டு மத கலவரம் உருவாக்குவதாகும். தமிழக அரசு இவா்களைக் கைது செய்ததோடு இந்த செயலின் பின்புலத்தில் உள்ள அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.