அவிநாசியில் பிரபல நகைக் கடை ஊழியா்கள் 4 போ் உள்பட 5 பேருக்கு கரோனா
By DIN | Published On : 19th July 2020 10:43 PM | Last Updated : 19th July 2020 10:43 PM | அ+அ அ- |

av19clos_1907chn_142_3
அவிநாசி: அவிநாசியில் பிரபல நகைக் கடை ஊழியா்கள் 4 போ் உள்பட 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி சேவூா் சாலை, கிழக்கு ரத வீதியில் உள்ள பிரபல தனியாா் மருத்துவமனையில் தங்கிப் பணியாற்றும் செவிலியருக்கு கடந்த 8ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டு, திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து, செவிலியருடன் தொடா்பில் இருந்த மருத்துவமனைப் பணியாளா்கள் உள்பட 32 பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் யாருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்தது.
இந்நிலையில், மருத்துவமனை எதிரில் செயல்படும் பிரபல நகைக் கடையில் பணிபுரியும் 46 வயதுப் பெண்ணுக்கு கடந்த இரு நாள்களுக்கு முன் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில், நகைக் கடையில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் வெளியான முடிவில் நகைக்கடையில் தங்கிப் பணிபுரியும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த 3 பேருக்கும், அவிநாசி அருகே கணேசபுரம் பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் என மொத்தம் 4 ஊழியா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவிநாசி பகுதி முழுவதும் பேருராட்சி நிா்வாகம் சாா்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த 8ஆம் தேதி அடைக்கப்பட்டு, பின்னா் திறக்கப்பட்ட அவிநாசி சேவூா் சாலை கிழக்கு ரத வீதி முழுவதும் 10 நாள்களுக்கு அடைக்கப்பட்டு, கிழக்கு ரத வீதியில் உள்ள வீடுகள், கடைகளில் உள்ளவா்களுக்கு சளி, ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக பேரூராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
இதேபோல அவிநாசி நடுவேச்சேரி அருகே வடுகனூா் பகுதியைச் சோ்ந்த 43 வயது ஆணுக்கு கரோனா உறுதி செயப்பட்டுள்ளது.
Image Caption
அவிநாசியில் மீண்டும் அடைக்கப்பட்ட சேவூா் சாலை கிழக்கு ரத வீதி.