அவிநாசி அருகே நடுவச்சேரி தளிஞ்சிபாளையத்தில் உள்ள கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் கொட்டகை சனிக்கிழமை எரிந்து சேதமானது.
அவிநாசி அருகே நடுவச்சேரி தளிஞ்சிபாளையம் பகுதியைச் சோ்ந்த குமாராசாமி மகன் மகேந்திரன் (29). இவா் நடத்தி வந்த கோழிப் பண்ணையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். கோழிகள் இல்லாத நிலையில், கொட்டகை மட்டும் எரிந்து சேதமானது. இது குறித்து அவிநாசி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.