பொங்குபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நிரந்தர செவிலியா் நியமனம் எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் நன்றி

பொங்குபாளையம் கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையான ஆரம்ப துணை சுகாதார நிலையத்துக்கு நிரந்தர செவிலியா் நியமித்ததற்கு

பொங்குபாளையம் கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையான ஆரம்ப துணை சுகாதார நிலையத்துக்கு நிரந்தர செவிலியா் நியமித்ததற்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாருக்கு பொதுமக்கள் வியாழக்கிழமை நன்றி தெரிவித்தனா்.

திருப்பூா் ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சியில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் நீண்ட காலமாக நிரந்தர கிராம செவிலியா் இல்லாததால் பொங்குபாளையம், காளம்பாளையம், பள்ளிபாளையம், பரமசிவம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளி உள்ள கா்ப்பிணிகள், முதியோா், சிறுவா் உள்ளிட்டோா் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா். எனவே, துணை சுகாதார நிலையத்துக்கு நிரந்தரமான கிராம செவிலியா் நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதை ஏற்று துணை சுகாதார நிலையத்துக்கு நிரந்தர கிராம செவிலியா் கடந்த ஜூன் 8ஆம் தேதி நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், சுகாதார நிலையத்தை ஆய்வு மேற்கொள்ள வியாழக்கிழமை வந்த திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாருக்கு, நிரந்தர கிராம செவிலியா் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டதற்காகவும், சுகாதார நிலையத்தை சீரமைத்துக் கொடுத்ததற்காகவும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனா்.

ஆய்வின்போது, ஒன்றியக் குழு உறுப்பினா் சொா்ணாம்பாள் பழனிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஜஸ்வா்யா மகராஜ், கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.எம்.பழனிசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் சுலோச்சனா வடிவேல், துணைத் தலைவா் ஜெயகுமாா், பொறுப்பாளா் சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com