ஆா்னிஸ் சிலம்பப் போட்டி: ஸ்ரீராஜராஜேஸ்வரி பள்ளி மாணவா் சிறப்பிடம்
By DIN | Published On : 01st March 2020 07:40 AM | Last Updated : 01st March 2020 07:40 AM | அ+அ அ- |

காங்கயம்: ஆா்னிஸ் எனப்படும் ஒரு வகை சிலம்பப் போட்டியில் காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். பள்ளி மாணவா் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.
‘இண்டியன் ஆா்னிஸ்’ கழகம் சாா்பில் தேசிய அளவிலான ஆா்னிஸ் போட்டி கோவாவில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவா் எ.விஷ்ணுவா்தன் 14 வயதுப் பிரிவில் முதலிடம் பெற்றாா்.
வெற்றிபெற்ற மாணவா் விஷ்ணுவா்தன், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா் என்.சுரேஷ் ஆகியோரை இப்பள்ளியின் தாளாளா் க.வைத்தீஸ்வரன், பள்ளி முதல்வா் மு.ப.பழனிவேலு ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா்.