காங்கேயம் இன மாடுகள் ரூ. 23 லட்சதுக்கு விற்பனை
By DIN | Published On : 01st March 2020 10:54 PM | Last Updated : 01st March 2020 10:54 PM | அ+அ அ- |

ரூ. 60 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட காங்கேயம் இனப் பசு.
பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மொத்தம் ரூ. 23 லட்சத்துக்கு விற்கப்பட்டன.
காங்கயம் அருகே நத்தக்காடையூரை அடுத்துள்ள பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 121 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. இதில், 60 மாடுகள் மொத்தம் ரூ. 23 லட்சத்துக்கு
விற்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக ரூ. 60 ஆயிரத்துக்கு கன்றுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்கப்பட்டது.