

அவிநாசி: அவிநாசி வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் சேவூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
சேவூா், கைகாட்டி ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அவிநாசி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சேவூா் ஜி.வேலுசாமி தலைமை வகித்தாா். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், அரசு கேபிள் டிவி வாரிய தலைவருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.எஸ்.எம். ஆனந்தன், நடிகா் மனோஜ்குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளா் ஏ.ஜெகதீசன், ஒன்றிய அவைத் தலைவா் என்.சின்னக்கண்ணு, ஒன்றிய விவசாய அணி துணைத் தலைவா் பி.தங்கவேல், முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி, ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளா் எம்.ஆா்.வேலுசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.