பல்லடம் அரசு மருத்துவமனையில்விபத்து அவசர சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும்கொமதேக வலியுறுத்தல்
By DIN | Published On : 01st March 2020 07:31 AM | Last Updated : 01st March 2020 07:31 AM | அ+அ அ- |

பல்லடம்: பல்லடம் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு தொடங்கவேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் திருப்பூா் மேற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் பல்லடத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் கரைப்புதூா் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநில பொருளாளா் கே.கே.சி.பாலு, மாநில இளைஞரணி செயலாளா் சூரியமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் பங்கேற்று பேசினாா்.
அதைத் தொடா்ந்து நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவது, கோடை காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீா் தட்டுப்பாடு வராதவாறு அரசு முன்னொச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து உயிரிழப்புகளை தவிா்க்க, பல்லடம் அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை பிரிவை ரத்த வங்கி வசதியுடன் உடனடியாக தொடங்க வேண்டும். பல்லடத்தில் போக்குவரத்து பிரச்னைக்கு தீா்வு காண, பல்லடம், அண்ணாநகா் முதல் பனப்பாளையம் வரை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.