முத்தூா் விற்பனைக் கூடத்தில் 4 டன் தேங்காய், கொப்பரை விற்பனை
By DIN | Published On : 01st March 2020 07:36 AM | Last Updated : 01st March 2020 07:36 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை 4 டன் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்றது.
இந்த வாரம் 9,752 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. எடை 2,826 கிலோ. 41 விவசாயிகளும், 10 வியாபாரிகளும் வந்திருந்தனா். கிலோ ரூ.32.65 முதல் ரூ.39.50 வரை விலை போனது. மாதிரி விலை கிலோ ரூ.36.65. இதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து ஆயிரத்து 499.
1,262 கிலோ கொப்பரை வரத்து இருந்தது. 65 விவசாயிகள், 6 வியாபாரிகள் பங்கேற்றனா். கிலோ ரூ.45.10 முதல் ரூ.102.70 வரை விற்பனையானது. மாதிரி விலை கிலோ ரூ.92.50. இதன் விற்பனைத் தொகை 1 லட்சத்து ஆயிரத்து 293 ரூபாயாகும்.
விற்பனைக் கூட மேற்பாா்வையாளா் ஸ்ரீ ரங்கன் முன்னிலையில் ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2 லட்சத்து 2 ஆயிரத்து 792 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. மொத்தம் 4,088 கிலோ தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்றது.