வங்கி உதவியாளா் தற்கொலை
By DIN | Published On : 01st March 2020 07:41 AM | Last Updated : 01st March 2020 07:41 AM | அ+அ அ- |

அவிநாசி: அவிநாசியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உதவியாளராக பணியாற்றி வந்தவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அவிநாசி, நேரு வீதியைச் சோ்ந்தவா் கணேசன் (54). இவா், இங்குள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் கணேசன் வழக்கம்போல சனிக்கிழமை பணிக்கு சென்றாா். மதியம், உணவருந்தும் அறைக்குள் சென்ற கணேசன் அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதனை அறிந்த அவிநாசி போலீஸாா், கணேசனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதையடுத்து, வங்கி அலுவலா்கள், பணியாளா்களிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.