வெள்ளக்கோவிலில் 7 டன் முருங்கைக்காய் வரத்து
By DIN | Published On : 01st March 2020 10:53 PM | Last Updated : 01st March 2020 10:53 PM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை 7 டன் முருங்கைக்காய் வரத்துக் காணப்பட்டது.
வெள்ளக்கோவிலில் முத்தூா் சாலை கொங்கு நகரிலுள்ள தனியாா் கொள்முதல் மையத்தில் வாரந்தோறும் முருங்கைக்காய்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சுற்றுவட்டார விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனை செய்யக் கொண்டு வருகின்றனா். கடந்த இரண்டு வாரங்களாக முருங்கைக்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்த வாரம் 65 விவசாயிகள் மொத்தம் 7 டன் முருங்கைக்காய்களைக் கொண்டுவந்தனா். இதில், மர முருங்கைக்காய், செடி முருங்கைக்காய் கிலோ ரூ. 17 முதல் ரூ. 30 வரை தரத்தைப் பொருத்து வியாபாரிகள் வாங்கினா். வரும் வாரங்களில் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.