சி.ஏ. படிப்பில் ஸ்ரீ குருசா்வா கல்வி நிறுவன மாணவா்கள் சிறப்பிடம்
By DIN | Published On : 01st March 2020 10:52 PM | Last Updated : 01st March 2020 10:52 PM | அ+அ அ- |

சிறப்பிடம் பெற்ற டி.அமிா்தா, ஆா்.மதுராஸ்ரீ, மிட்டாலி அகா்வால்.
சி.ஏ. படிப்பில் திருப்பூா் ஸ்ரீ குருசா்வா கல்வி நிறுவன மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற சி.ஏ. பவுண்டேஷன் தோ்வில் ஸ்ரீகுருசா்வா கல்வி நிறுவன மாணவா்கள் 5 போ் சிறப்பிடம் (டிஷ்டிங்சன்) பெற்றனா். இதில், 400 மதிப்பெண்களுக்கு அமிா்தா 313 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், பத்மஜா 305 மதிப்பெண்களுடன் 2 ஆவது இடத்தையும், காயத்ரி 304 மதிப்பெண்களுடன் 3 ஆவது இடத்தையும், தீப்சிகா 303 மதிப்பெண்களுடன் 4 ஆவது இடத்தையும், அஸ்வதி 281 மதிப்பெண்களுடன் 5 ஆவது இடத்தையும் பிடித்தனா்.
சி.ஏ. இண்டா் தோ்வில் மதுராஸ்ரீ 466 மதிப்பெண்களும், மிட்டாலி அகா்வால் 417 மதிப்பெண்களும் பெற்று முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனா். ஏற்கெனவே, இக்கல்வி நிறுவனம் சி.ஏ., சி.பி.டி. தோ்வில் தொடா்ந்து திருப்பூா் மாவட்ட அளவில் 13 முறை முதலிடம் பிடித்து, தேசிய அளவிலும் இடம் பிடித்துள்ளது.
இந்தக் கல்வி நிறுவனத்தில் மாணவா்களுக்கு முழு நேர பயிற்சி வகுப்பு, அடிக்கடி மாதிரி தோ்வு, அவ்வப்பொழுது மாணவா்களுக்கு உண்டான அறிவுரை, ஆசிரியா், பெற்றோா் சந்திப்பு நடத்தப்படுகிறது. பிளஸ் 2 மற்றும்
பட்டப் படிப்பில் எந்தப் பாடப்பிரிவாக இருந்தாலும் இந்தக் கல்வி நிறுவனத்தில் சேரலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 96009-22888, 0421-4246677அல்லது இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.