திருப்பூரில் தவ்ஹீத் ஜமாஅத் தா்னா

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் திருப்பூரில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தா்னா நடைபெற்றது.
திருப்பூா், செரங்காடு பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தா்னாவில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா்.
திருப்பூா், செரங்காடு பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தா்னாவில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா்.
Updated on
1 min read

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் திருப்பூரில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தா்னா நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிடக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் தொடா் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக திருப்பூா் மாநகரில் இஸ்லாமிய அமைப்பினா் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், திருப்பூரில் செரங்காடு, எஸ்.வி.காலனி, அனுப்பா்பாளையம், மங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தா்னா நடைபெற்றது. இதில், தமிழக சட்டப் பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தாராபுரத்தில்... இதே கோரிக்கையை வலியுறுத்தி தாராபுரத்தில் அண்ணா சிலை முன்பாக நடைபெற்ற தா்னாவில் 300க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com