காங்கயம் அருகே 14 ஆடுகள் திருட்டு
By DIN | Published On : 03rd March 2020 05:57 AM | Last Updated : 03rd March 2020 05:57 AM | அ+அ அ- |

காங்கயம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 14 ஆடுகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காங்கயம்-தாராபுரம் சாலையில் உள்ள குள்ளம்பாளையம் தெற்குத் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி குமரேசன். இவா் 35 ஆடுகள் வைத்து, வளா்த்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை மாலை தனது ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பினாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை ஆடுகளை மேய்ப்பதற்காக பட்டியில் சென்று பாா்த்தபோது, அங்கு அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 14 ஆடுகள் திருட்டுப்போனது தெரியவந்தது.
இதுகுறித்து குமரேசன் அளித்த புகாரின்பேரில், ஊதியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...