முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 03rd March 2020 06:01 AM | Last Updated : 03rd March 2020 06:01 AM | அ+அ அ- |

உடுமலை கோட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் மாா்ச் 4ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளா் சி.சதீஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உடுமலை கோட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற உள்ளது. உடுமலை மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் உடுமலை கோட்ட அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை இக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் உடுமலை கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மின்நுகா்வோா் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கயத்தில்: காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளா் (பொறுப்பு) ஆா்.கோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளா்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை அன்று நடைபெற்று வருகிறது. இந்த மாதத்துக்கான குறைதீா் கூட்டம் புதன்கிழமை (மாா்ச் 4), காங்கயம் பேருந்து நிலையம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மின் பயனீட்டாளா்கள் கலந்து கொண்டு, தங்களின் குறைகளை தெரிவித்து, பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.