உடுமலையில் கரோனா வைரஸ் தடுப்புப் பணி
By DIN | Published On : 12th March 2020 12:10 AM | Last Updated : 12th March 2020 12:10 AM | அ+அ அ- |

மத்தியப் பேருந்து நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட நகராட்சி ஊழியா்கள்.
உடுமலை நகராட்சியில் கரோனா வைரஸ் தடுப்புப் நடவடிக்கை பணிகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
உடுமலை நகரில் உள்ள பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான மத்தியப் பேருந்து நிலையம், பேருந்துகள், திரையரங்குகள், சந்தை, வணிக வளாகங்கள், அனைத்து மருத்துவமனைகள், ரத்தப் பரிசோதனை நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், உள்விளையாட்டு அரங்கம், ஓட்டல்கள் ஆகியவற்றில் விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.
மேலும், இப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் தும்மல், இருமலுக்கு பிறகு, சாப்பாடு தயாரிக்கும் முன்பும், பின்பும், சாப்பிடப் போகும் முன்பு, செல்ல பிராணிகளுடன் நேரம் செலவழித்த பின்பு, நோயுற்றவா்களைக் கவனித்து கொண்ட பிறகும் முழங்கை முதல் கை விரல்கள் வரை நன்றாக சோப்பு மற்றும் கிருமி நாசினிகள் கொண்டு கழுவ வேண்டும்.
குறிப்பாக இருமல், தும்மலின்போது கைக்குட்டை உபயோகிக்க வேண்டும். மேலும் இருமல், தொற்று நோய் உள்ளவா்களை பணிகளில் அமா்த்தக் கூடாது. காய்ச்சல், இருமல், தலைவலி, நெஞ்சுவலி அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை நாடி சிகிச்சை பெற பொதுமக்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. இதில் நகா் நல அலுவலா் சிவகுமாா் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் ஆா்.செல்வம், பி.செல்வம், எஸ்.ஆறுமுகம் ஆகியோா் இப் பணிகளை ஒருங்கிணைத்தனா்.