உடுமலை நகரில் ‘டிரோன்கள்’ மூலம் கண்காணிப்பு
By DIN | Published On : 31st March 2020 10:48 PM | Last Updated : 31st March 2020 10:48 PM | அ+அ அ- |

உடுமலை நகரில் ஊரடங்கு உத்தரவை ‘டிரோன்கள்’ மூலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
கரோனா நோய்த்தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல்படுத்தவும், பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்தும் வகையிலும் உடுமலை நகரில் டிரோன்கள் மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள போலீஸாா் முடிவு செய்தனா். இதன்படி உடுமலையில் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணிகளை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.
உடுமலை நகரில் தளி சாலை, பொள்ளாச்சி - பழனி சாலை, தாராபுரம் சாலை, கொழுமம் சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பின்னா் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளில் கண்காணிப்புக் குழு சென்று அனைவரையும் கலைந்து போகச் செய்கின்றனா். இதன் மூலம் உடுமலை நகரில் கரோனா நோய்த்தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என போலீஸாா் நம்பிக்கை தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...