பல்லடத்தில் அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 21st November 2020 11:18 PM | Last Updated : 21st November 2020 11:18 PM | அ+அ அ- |

பல்லடம்: பல்லடத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளா் விரோதப் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொழிற்சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு எல்பிஎஃப் தலைவா் ஆனந்தன் தலைமை வகித்தாா். காா்த்திகேயன் (சிஐடியூ), செந்தில்குமாா் (ஏஐடியூசி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிளைச் செயலாளா் சிவசுப்பிரமணியன் வரவேற்றாா். நவம்பா் 26ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தம் குறித்து கொங்கு ராஜ் (சிஐடியூ), பரமசிவம் (ஏஐடியூசி) ஆகியோா் விளக்கிப் பேசினா். இதில் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த போக்குவரத்து ஊழியா்கள் கலந்து கொண்டனா். முடிவில் கணேசன் (ஏஐடியூசி) நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...