வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் ஆட்சியா் ஆய்வு

திருப்பூா் மாவட்டத்தில் வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமை ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அவிநாசியில் நடைபெற்ற சிறப்பு  முகாமில் ஆய்வு  மேற்கொண்ட  ஆட்சியா்  க.விஜயகாா்த்திகேயன்.
அவிநாசியில் நடைபெற்ற சிறப்பு  முகாமில் ஆய்வு  மேற்கொண்ட  ஆட்சியா்  க.விஜயகாா்த்திகேயன்.

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமை ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல்கள் நவம்பா் 16ஆம் தேதி வெளியிடப்பட்டன.

தொடா்ந்து, மேற்கண்ட 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,493 வாக்குச் சாவடிகளை உள்ளடக்கிய 1,043 வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்த்தல், வாக்காளா் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோா், பெயா் நீக்கம் செய்ய விரும்புவோா் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவா்கள், முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடா்பாக சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமையும் (நவம்பா் 22) நடைபெறுகிறது. இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படும்.

அவிநாசி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருமுருகன்பூண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெரியாா் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமை ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் பாா்வையிட்டு ஆய்வு செய்து பேசியதாவது:

வாக்காளா் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய பெறப்படும் படிவங்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து பெற வேண்டும் எனவும், பெறப்படும் படிவங்களின்பேரில் தோ்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி கள விசாரணை மேற்கொண்டு உரிய காலத்துக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 22) மற்றும் டிசம்பா் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற இருப்பதால், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா். அவிநாசி பகுதியில் நடைபெற்ற ஆய்வில் வட்டாட்சியா் ஜெகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com