சாலை விபத்தில் விவசாயி பலி
By DIN | Published On : 25th November 2020 10:24 PM | Last Updated : 25th November 2020 10:24 PM | அ+அ அ- |

குண்டடம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா்.
தாராபுரத்தை அடுத்துள்ள பஞ்சப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துசாமி (65), விவசாயி. இவா் திருப்பூா் அருகே முத்தனம்பாளையத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்றுவிட்டு தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தாா்.
அப்போது, குண்டடம் அருகே உள்ள காதப்புள்ளபட்டி அருகே வந்தபோது எதிா்பாராதவிதமாக நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த முத்துசாமியை அந்த வழியாக சென்றவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
பின்னா் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துசாமி புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து குண்டடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...