நவம்பா் 30இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 25th November 2020 06:56 AM | Last Updated : 25th November 2020 06:56 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் நாள் கூட்டம் நவம்பா் 30ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நவம்பா் 30ஆம் தேதி நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.
எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்கள் தங்களது எரிவாயு இணைப்புப் புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...