பொங்கலூா் பகுதியில் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 25th November 2020 06:57 AM | Last Updated : 25th November 2020 06:57 AM | அ+அ அ- |

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் பகுதியில் அரசுப் பேருந்துகளை இயக்க தேவணம்பாளையம் சுவாமி விவேகானந்தா இளைஞா் நற்பணி மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு சாா்பில் அரசுப் போக்குவரத்துக் கழகம் பல்லடம் கிளை மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூா், பல்லடம் பகுதிகளில் உள்ள பின்னலாடை மற்றும் விசைத்தறிக் கூடங்கள் கடந்த 4 மாதங்களாக இயங்கி வருகின்றன. பொங்கலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களைச் சோ்ந்த பலா் வேலை தொடா்பாக திருப்பூா், பல்லடத்துக்கு தினமும் சென்று வருகின்றனா்.
இந்த நிலையில், பொங்கலூா் பகுதியில் பொது முடக்கத்துக்குப் பின்பு இதுவரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதனால் திருப்பூருக்குச் செல்வோருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. 28, 28ஏ, 41, 22 ஆகிய நகரப் பேருந்துக்களை காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...