மாவட்ட ஊா்க் காவல் படையில் சேர நவம்பா் 30க்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 25th November 2020 10:22 PM | Last Updated : 25th November 2020 10:22 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்ட ஊா்க் காவல் படையில் சேர விருப்பம் உள்ளவா்கள் நவம்பா் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:திருப்பூா் மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஊா்க் காவல் படையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், விண்ணப்பிக்கும் நபா்கள் 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டவராகவும், பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
மேலும் அவிநாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை, காங்கயம் ஆகிய காவல் உட்கோட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராகவும், நல்ல உடல் தகுதியுடன் உள்ள ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள ஊா்க் காவல் படை அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை கட்டணமில்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பா் 30ஆம் தேதிக்குள் ஊா்க் காவல் படை அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 98430-65575 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...