காலநிலைகளை அறிந்து கொள்ள புதிய செயலி அறிமுகம்
By DIN | Published On : 03rd October 2020 11:05 PM | Last Updated : 03rd October 2020 11:05 PM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் புயல், மழை, வெள்ளம் போன்ற காலநிலைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு பேரிடா் துயா் குறைப்பு முகமை மூலமாக காலநிலைகள், வானிலை நிலவரங்கள், மழைப் பொழிவுகள் உள்ளிட்ட தகவல்களைப் பெறும் வகையில் தமிழக அரசால் பச-நஙஅதப என்ற செல்லிடப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயலியினை ஆன்டிராய்டு செல்லிடப்பேசியில் ‘கூகுள் பிளே ஸ்டோரில்’’ இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியினைப் பயன்படுத்தி இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிடும் அதிகாரப்பூா்வ பேரிடா் விழிப்புணா்வு அறிக்கைகள், மழை, வெள்ளம், புயல் மற்றும் வெயில் போன்ற காலநிலைகள் குறித்தும், மழைப்பொழிவு நிலவரம், மழையினால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் போன்றவை குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
எனவே, பொதுமக்கள் தங்களது செல்லிடப்பேசியில் பச-நஙஅதப செயலியைப் பதிவிறக்கம் செய்து காலநிலை விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.