மக்கள் நீதிமன்றம்: 319 வழக்குகளுக்கு தீா்வு
By DIN | Published On : 03rd October 2020 11:02 PM | Last Updated : 03rd October 2020 11:02 PM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 319 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.
திருப்பூரில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சாா்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட நீதிபதி எஸ்.அல்லி தொடக்கிவைத்தாா்.
இதேபோல தாராபுரம், உடுமலை, பல்லடம், காங்கயம், அவிநாசி உள்ளிட்ட நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் மோட்டாா் வாகன விபத்து காப்பீட்டு வழக்குகள், காசோலை மோசடி, சிவில் வழக்குகள், சிறு குற்ற வழக்குகள் என மொத்தம் 384 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில் 319 வழக்குகளுக்கு ரூ.17.42 கோடியில் சமரசத் தீா்வு காணப்பட்டது. திருப்பூரில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி கோவிந்தராஜ், மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, நீதிபதிகள் கலந்து கொண்டனா்.
உடுமலையில்:
உடுமலை சாா்பு நீதிபதி எம்.சுரேஷ் தலைமை வகித்தாா். நீதிபதி பாக்கியராஜ், நீதிபதி பி.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி எல்.ஹெச்.கிருஷ்ணன், வழக்குரைஞா் ஆா்.மகேஸ்வரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் 19 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டன. இதில் 11 மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், 1 காசோலை மோசடி வழக்கு, 7 சிவில் வழக்கு என வழக்குகளில் ரூ.87 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.
உடுமலை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பிஏஎஸ். சுந்தரம், செயலாளா் எம்.மாரிமுத்து, வழக்குரைஞா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.