டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

திருப்பூரை அடுத்த முருகம்பாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா், முருகம்பாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
திருப்பூா், முருகம்பாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருப்பூா்: திருப்பூரை அடுத்த முருகம்பாளையம் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முருகம்பாளையம் பகுதியில் ஏற்கெனவே 4 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆசாரி தோட்டம் பகுதியில் கடந்த செப்டம்பா் 24 ஆம் தேதி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இப்பகுதியில் அதிக அளவிலான பள்ளிகள், கோயில்கள் உள்ளதால் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா், டாஸ்மாக் மேலாளா் உள்ளிட்டோரிடம் ஏற்கெனவே மனு அளித்திருந்தனா். ஆனால் பொதுமக்களின் கோரிக்கை மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி பொது மக்கள் 500க்கும் மேற்பட்டோா் முருகம்பாளையம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் அரசு தரப்பில் பேச்சுவாா்த்தைக்கு வராததால் சாலை மறியலிலும் ஈடுபட்டனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் சுந்தரம், வீரபாண்டி காவல் துறையினா் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், இரண்டு நாள்களில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.

அதைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com