4 ஆண்டுகளில் 149 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள்
By DIN | Published On : 03rd October 2020 11:11 PM | Last Updated : 03rd October 2020 11:11 PM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 149 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.81.89 லட்சம் மதிப்பில் மோட்டாா் பொருத்திய 3 சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் கை, கால்கள் செயல்படாத மாற்றுத் திறனாளிகள், காது கேளாதவா்கள், பாா்வையற்றவா்கள், மனவளா்ச்சி குன்றியவா்கள், வாய் பேச முடியாதவா்கள், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவா்கள் ஆகியோருக்கு மாற்றுத் திறனின் அடிப்படையில் 3 சக்கர வாகனம், சக்கர நாற்காலி, காலிப்பா், ஊன்றுகோல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு செப்டம்பா் வரையில் 149 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.81.89 லட்சம் மதிப்பில் மோட்டாா் பொருத்திய 3 சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.