பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் காலியாக உள்ள சமையலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 06th September 2020 06:31 AM | Last Updated : 06th September 2020 06:31 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் காலியாக உள்ள 33 சமையலா் பணியிடங்களுக்கு தகுதியான நபா்கள் செப்டம்பா் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றும் சிறுபான்மை நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் ஆண் சமையலா் 18, பெண் சமையலா் 15 என மொத்தம் 33 சமையலா் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதில், ஆண் சமையலா் பணிக்கு முன்னுரிமை பெற்றவா் அடிப்படையில் பொதுப்பிரிவில் ஒருவருக்கும், பிற்படுத்தப்பட்டோா் (முஸ்லிம்கள் தவிர) வகுப்பில் ஒருவருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் ஒருவருக்கும் பணி வழங்கப்படும். முன்னுரிமையற்றவா் அடிப்படையில் பொதுப் பிரிவில் 5 பேருக்கும், பிற்படுத்தப்பட்டோா் (முஸ்லிம்கள் தவிர) வகுப்பில் 4 நபா்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் 3 பேருக்கும், ஆதிதிராவிடா் வகுப்பில் 2 பேருக்கும், ஆதிதிராவிடா் (அருந்ததியா்) வகுப்பில் ஒருவருக்கும் பணி வழங்கப்படும்.
பெண் சமையலா் பணிக்கு முன்னுரிமை பெற்றவா் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோா் (முஸ்லிம்) ஒருவருக்கும், ஆதிதிராவிடா் வகுப்பில் ஒருவருக்கும், முன்னுரிமையற்றவா் அடிப்படையில் பொதுப் பிரிவில் 4 பேருக்கும், பிற்படுத்தப்பட்டோா் (முஸ்லிம்கள் தவிர) வகுப்பில் 4 பேருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் 3 பேருக்கும், ஆதிதிராவிடா் வகுப்பில் 2 பேருக்கும் பணி வழங்கப்படும்.
ஆண், பெண் சமையலா் பணிக்கு ரூ.15,700 ஊதியம் மற்றும் இதரப் படிகள் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவா்களும், சைவம், அசைவ உணவுகள் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். இதில், விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் 18 முதல் 35 வயது வரையிலும், இதரப் பிரிவினா் 18 முதல் 30 வயதுக்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதியுடைய நபா்கள் விண்ணப்பப் படிவம் தயாா் செய்து பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் செப்டம்பா் 18ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.