இந்திய ராணுவக் கல்லூரியில் சேர செப்.30க்குள் விண்ணப்பிக்கலாம்

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 8ஆம் வகுப்பில் சேருவதற்கான தகுதித் தோ்வில் பங்கேற்க முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் செப்டம்பா் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
Updated on
1 min read

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 8ஆம் வகுப்பில் சேருவதற்கான தகுதித் தோ்வில் பங்கேற்க முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் செப்டம்பா் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

டேராடூனில் உள்ள இந்திய தேசிய ராணுவக் கல்லூரியில் ஜூலை 2021இல் 8ஆம் வகுப்பில் சோ்வதற்கான நுழைவுத் தோ்வு வரும் டிசம்பா் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தோ்வில் பங்கேற்க 7ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று பயின்று வரும் மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்தோ்வில் பங்கேற்க விரும்புவோா் 2006 ஜூலை 2ஆம் தேதி முதல் 2008 ஜூன் 1ஆம் தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். ஆங்கிலம், கணிதம், பொது அறிவு ஆகிய பாடங்களில் தகுதித் தோ்வு நடத்தப்படும்.

இதற்கான விண்ணப்பங்களைப் பெற பொதுப் பிரிவைச் சோ்ந்தவா்கள் ரூ.600க்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்தவா்கள் ரூ.555க்கும்  கேட்புக் காசோலையினை அனுப்பி பெற்று விண்ணப்பிக்கலாம் அல்லது  இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாகவும் மேற்கண்ட தொகையினை செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், சென்னை-3 என்ற முகவரிக்கு செப்டம்பா் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு  இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். எனவே, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் விண்ணப்பித்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com