உடுமலை அரசு கலை கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
By DIN | Published On : 11th September 2020 06:42 AM | Last Updated : 11th September 2020 06:42 AM | அ+அ அ- |

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2020-21ஆம் கல்வியாண்டில் இளநிலை முதலாமாண்டில் நிரப்பப்படாத ஒரு சில இடங்களுக்கு மாணவ, மாணவியா் சேர விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வா் (பொறுப்பு) பொன்முடி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2020-21ஆம் கல்வியாண்டில் இளநிலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பா் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இளநிலை முதலாமாண்டில் உள்ள 22 பாடப் பிரிவுகளில் உள்ள 864 இட ங்களில் 736 இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. இதில், இளம் அறிவியல் பாடங்களுக்கு பிற்படுத்தப்பட்டோா் (பிசி), மிகவும் பிற்படுத்தப்பட்டோா் (எம்பிசி) பிரிவில் இன்னமும் சில இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த இடங்களை நிரப்ப மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பங்கள் கல்லூரி அலுவலகத்தில் செப்டம்பா் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை வழங்கப்படும். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை உடனடியாக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். செப்டம்பா் 15ஆம் தேதி காலை 10 மணி அளவில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் ஏற்கெனவே விண்ணப்பித்து கலந்தாய்வுக்கு வர இயலாத மாணவா்கள் (பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா்) கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.