திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 155 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,067 ஆக உயா்ந்துள்ளது.
திருப்பூா், மண்ணரையைச் சோ்ந்த 27 வயது பெண், புதூா் காலனியைச் சோ்ந்த 55 வயது ஆண், சிறுபூலுவபட்டியைச் சோ்ந்த 81 வயது முதியவா், டைமண்ட் லே அவுட்டைச் சோ்ந்த 76 வது மூதாட்டி, அனுப்பா்பாளையத்தைச் சோ்ந்த 30 வயது ஆண், பூண்டி, செட்டிபாளையத்தைச்சோ்ந்த 36 வயது ஆண், வ.உ.சி.வீதியைச் சோ்ந்த 47 வயது ஆண் உள்பட 155 பேருக்கு கரோனா நோய்த்தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,067 ஆக அதிகரித்துள்ளது. இதில், ஒருவரது பாதிப்பு வேறு மாவட்டத்தின் பட்டியலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 1,333 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வியாழக்கிழமை ஒரே நாளில் 105 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.