வாய்க்காலில் ஆண் சடலம்
By DIN | Published On : 11th September 2020 06:41 AM | Last Updated : 11th September 2020 06:41 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் அருகே பரம்பிக்குளம் ஆழியாறு வாய்க்காலில் வியாழக்கிழமை ஆண் சடலம் கிடந்தது.
வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகள் வழியாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்கால் உள்ளது. தற்போது தண்ணீா் திறக்கப்பட்டு வாய்க்காலில் தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. அனுமந்தபுரம் அருகே இந்த வாய்க்காலின் மதகில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடந்தது. சடலத்தை மீட்ட வெள்ளக்கோவில் போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.