மண் லாரி பறிமுதல்
By DIN | Published On : 26th September 2020 11:17 PM | Last Updated : 26th September 2020 11:17 PM | அ+அ அ- |

அவிநாசி: அவிநாசி அருகே வெள்ளியம்பாளையம் பகுதியில் மண் லாரியை கணிம வளத் துறையினா் சனிக்கிழமை மாலை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
திருப்பூா் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறையினா்(கனிம வளம்) அவிநாசி அருகே செம்பியமநல்லூா், வெள்ளியம்பாளையம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த மண் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அனுமதியின்றி மண் அள்ளி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, லாரி பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் ஒப்படைப்பட்டது. இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் முருகசாமியைத் தேடி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...