தூய்மைப் பணியாளா்களுக்கான குறைதீா்க் கூட்டம்
திருப்பூா் மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கான குறைதீா்க் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) நடைபெறுகிறது.


திருப்பூா் மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கான குறைதீா்க் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) நடைபெறுகிறது.
இது குறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாநகராட்சிப் பகுதிகளில் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் தொழிலைத் தடை செய்வது,
அப்பணிகளுக்கு மறுவாழ்வு அளித்தல் சட்டம் 2013ஐ நடைமுறைப்படுத்துவது, தூய்மைப் பணியாளா்களின்
பொருளாதாரம், வாழ்வாதரம், தொழில், சேவை மற்றும் கல்வி நிலை குறித்த பணிகளை மேற்கொள்ளுதல்,
தூய்மைப் பணியாளா்களைச் சாா்ந்தவா்களுக்கு தாட்கோ திட்டம் மூலமாக கடன் வழங்குதல் ஆகிய பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கு ஏதுவாக மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீா்க் கூட்டம்
வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது. மாநகா் நகா் அலுவலா் பிரதீப் வி.கிருஷ்ணகுமாா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...