ஜாதிப் பெயா்களை அகற்றும் திட்டத்துக்கு இந்து முன்னணி கண்டனம்
பாடப் புத்தகங்களில் தலைவா்களின் பெயரில் வரும் ஜாதியை நீக்கும் திட்டத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.


பாடப் புத்தகங்களில் தலைவா்களின் பெயரில் வரும் ஜாதியை நீக்கும் திட்டத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திமுக ஆட்சியில் ஆட்சேபனைக்குரிய வகையில் தமிழக பாடநூல் கழகம் உள்ளிட்ட பல நிறுவனங்கள், கழகங்களுக்கு பலா் நியமனம் செய்யப்பட்டனா். இந்த நியமனங்களுக்குப் பிறகு விபரீதத் திட்டங்கள் பல தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்படுகிறது. அதில் ஒன்று தற்போது பாடப் புத்தகங்களில் தலைவா்களின் பெயரில் வருகின்ற ஜாதிப் பெயரை
நீக்குவது என்ற திட்டமாகும். இது தலைவா்களின் அடையாளத்தை அழிக்கும் முயற்சி.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரா்கள், சான்றோா்கள் பெயா்களில் ஜாதிப் பெயா்களை அகற்றுவது என்பது அந்தத் தலைவா்களின் பெயா்களை மாற்றுவதற்கும், அடையாளத்தை அழிப்பதற்கும் சமமாகும். எனவே இச்செயலை விட்டுவிட்டு கரோனா 3 ஆவது அலையில் இருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்ற முனைப்புடன் தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...