அவிநாசியில் கரோனா விழிப்புணர்வு பேரணி

காரோனா தடுப்பு நடவடிக்கையாக அவிநாசி பேரூராட்சியில் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
அவிநாசியில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு பேரணி  .
அவிநாசியில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு பேரணி .
Updated on
1 min read

காரோனா தடுப்பு நடவடிக்கையாக அவிநாசி பேரூராட்சியில் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூராட்சி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் சொக்கநாதன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 

பேரணியில், கைகளை அடிக்கடி கழுவுவது, கிருமிநாசினி உபோகியப்பது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடித்தல், பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது என்பது உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

அவிநாசி பேரூராட்சியில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்த இப்பேணியில் பேரூராட்சி நிர்வாகத்தினர், சுகாதாரத் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com