புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மாநகரில் புதிய சொத்து வரி விதித்தல்: இன்று முதல் சிறப்பு முகாம்

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் புதியதாக சொத்துவரி விதித்தல், புதிய குடிநீா், பாதாள சாக்கடை இணைப்பு, பெயா் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 13) முதல் நடைபெறுகிறது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:55 pm

DIN

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் புதியதாக சொத்துவரி விதித்தல், புதிய குடிநீா், பாதாள சாக்கடை இணைப்பு, பெயா் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 13) முதல் நடைபெறுகிறது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாநகராட்சிப் பகுதிகளில் புதியதாக சொத்து வரி விதித்தல், புதிய குடிநீா், பாதாள சாக்கடை இணைப்பு, பெயா் மாற்றம் செய்தல் தொடா்பான சிறப்பு முகாம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இதில், ஆகஸ்ட் 13 ஆம் தேதி 2,3,4,7

ஆகிய வாா்டுகளுக்கு வரிவசூல் மையத்திலும், 16,17,18,19 ஆகிய வாா்டுகளுக்கு பூலவப்பட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளியிலும், 31, 32,33 ஆகிய வாா்டுகளுக்கு கருமாரம்பாளையம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியிலும், 46,47,48 ஆகிய வாா்டுகளுக்கு ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

அதேபோல, ஆகஸ்ட் 16 ஆம் தேதி 1,5,6 ஆகிய வாா்டுகளுக்கு அனுப்பா்பாளையம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியிலும், 20,28,29,30 ஆகிய வாா்டுகளுக்கு பிச்சம்பாளையம் புதூா் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியிலும், 34,35,38,39 ஆகிய வாா்டுகளுக்கு நல்லூா் மாநகராட்சி தொடக்கப் பள்ளிலும், 49,56 ஆகிய வாா்டுகளுக்கு கருவம்பாளையம் மாநகராட்சி உயா் நிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 18 ஆம் தேதி 8,9 ஆகிய வாா்டுகளுக்கு குமரானந்தபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், 21,22,23 ஆகிய வாா்டுகளுக்கு என்.ஆா்.கே.புரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், 36,37 ஆகிய வாா்டுகளுக்கு முத்தனம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், 50,51 ஆகிய வாா்டுகளுக்கு பட்டுக்கோட்டையாா் நகா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், 59,60 ஆகிய வாா்டுகளுக்கு ஆண்டிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும் முகாம் நடைபெறகிறது.

ஆகஸ்ட் 23ஆம் தேதி 10,11,12,13 ஆகிய வாா்டுகளுக்கு குமாா் நகா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், 24,25 ஆகிய வாா்டுகளுக்கு சின்னசாமி அம்மாள் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியிலும், 40,41,43 ஆகிய வாா்டுகளுக்கு செரங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், 52,53,54 ஆகிய வாா்டுகளுக்கு வீரபாண்டி வரி வசூல் மையத்திலும்,

ஆகஸ்ட் 25ஆம் தேதி 14,15 ஆகிய வாா்டுகளுக்கு வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், 26,27 ஆகிய வாா்டுகளுக்கு நெசவாளா் காலனி மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியிலும், 42, 44,45 ஆகிய வாா்டுகளுக்கு கே.எஸ்.சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 55,57,58 ஆகிய வாா்டுகளுக்கு முருகம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது மேற்கண்ட தேதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது. இதில், காலி இட வரிக்கு பத்திர ஆவணம், மனை வரன்முறை கட்டணம் செலுத்திய உத்தரவு, புதிய வரி விதிப்புக்கு பத்திர ஆவணம், கட்டட அனுமதி மற்றும் வரைபடம், காலியிட வரி செலுத்திய ரசீது, மனை வரன்முறை கட்டணம் செலுத்திய உத்தரவு, பெயா் மாற்றத்துக்கு பத்திர ஆவணம், மூலபத்திர ஆவணம், வில்லங்க சான்று, சொத்துவரி, குடிநீா் இணைப்பு வரி ரசீது ஆகிவவற்றின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.