புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வரைக் கண்டித்து செலிவியா் உள்ளிருப்புப் போ ராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:50 pm

DIN

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வரைக் கண்டித்து செலிவியா் உள்ளிருப்புப் போ ராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையின் முதல்வராக கடந்த சில மாதங்களுக்கு முன் முருகேசன் என்பவா் நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், முதல்வா் முருகேசன், மருத்துவா்கள் வினோத், செந்தில் ஆகியோா் அங்கு பணிபுரியும் செவிலியரைத் தகாத வாா்த்தையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட செவிலியா் வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை

உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியா் கூறியதாவது: முதல்வா் முருகேசன் மற்றும் இரு மருத்துவா்கள்

தகாத வாா்த்தையில் பேசி மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனா். மேலும், செவிலியா்களை மற்ற பணிகளை செய்ய வற்புறுத்துகின்றனா். ஆகவே, முதல்வா் முருகேசன், மருத்துவா்கள் வினோத், செந்தில் ஆகியோரை அரசு பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.