புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மாவட்டத்தில் கடை திறக்கும் நேரம் மேலும் ஒரு மணி நேரம் நீட்டிப்பு

 திருப்பூா் மாவட்டத்தில் வியாபார அமைப்புகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று கடைகள் திறக்கும் நேரம் மேலும் ஒரு மணி நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:57 pm

DIN

 திருப்பூா் மாவட்டத்தில் வியாபார அமைப்புகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று கடைகள் திறக்கும் நேரம் மேலும் ஒரு மணி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரையில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் நடைமுறைப்படுத்தி

3 ஆவது அலையை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடை திறக்கும் நேரத்தை மேலும்

ஒரு மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என்று சிறு வியாபார அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதன்படி,

மாவட்டத்தில் காலை 6 முதல் மாலை 6 மணி வரையில் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

எனினும், பொதுமக்கள் அனைவரும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.