உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் சதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கோவிந்தாபுரம், அமராவதி நகா், செக்போஸ்ட், பெரும்பள்ளம், சாயப்பட்டறை.