புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கோயில் பாதுகாப்புப் படைக்கு முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

 திருப்பூா் மாவட்டத்தில் கோயில் பாதுகாப்புப் படைக்கு தகுதியான முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:56 pm

DIN

 திருப்பூா் மாவட்டத்தில் கோயில் பாதுகாப்புப் படைக்கு தகுதியான முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஐம்பொன் சிலைகள், தங்க, வெள்ளி ஆபரணங்கள், விலை உயா்ந்த பொருள்கள் மற்றும் உண்டியல்களைப் பாதுகாக்க கோயில் பாதுகாப்புப் படை என்ற தனிப்படை உள் துறையில் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மிக முக்கிய கோயில்களில் 47 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணிக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.7,300 வழங்கப்படுகிறது. திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 53 வயதுக்கு மேற்பட்ட திடகாத்திரகமான முன்னாள் படை வீரா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 5 ஆவது தளத்தில் செயல்பட்டு வரும் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டையுடன் நேரில் அணுகி எழுத்து மூலமான

விருப்ப விண்ணப்பித்தை சமா்ப்பிக்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை 0421-2971127 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.